Kathir News
Begin typing your search above and press return to search.

வில்லியம்சனின் சதத்தால் வலுவான நிலையில் நியூசிலாந்து அணி!

வில்லியம்சனின் சதத்தால் வலுவான நிலையில் நியூசிலாந்து அணி!

வில்லியம்சனின் சதத்தால் வலுவான நிலையில் நியூசிலாந்து அணி!

Pravin kumarBy : Pravin kumar

  |  27 Dec 2020 12:22 PM GMT

நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. டி-20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் உள்ள பை ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.

முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் லேதம் 4 ரன்னிலும் புலுடெல் 5 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் வந்த வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த அதனை தொடர்ந்து டெய்லர் 70 ரன்களில் அவுட் ஆக பின்னர் வந்த ஹென்றி நிக்கோலஸ் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 23 வது சதத்தை பூர்த்தி செய்தார். அவரை தொடர்ந்து நிக்கோலஸ் அரைசதம் வீளாசி 56 ரன்னில் அவுட் ஆக வில்லிய்மசன் 129 ரன்னில் அவுட் ஆகினார். வெய்டிங் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 73 ரன்கள் குவித்தார்.

அதை தொடர்ந்து பின்னர் வந்த வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அப்ரிடி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் மாசூத் 10 ரன்னில் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 30-1 என்ற நிலையில் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News