Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  22 Dec 2020 2:02 PM IST

பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. கடந்த டிசம்பர் 18 தேதி முதல் டி-20 போட்டி நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பான பந்து வீச்சின் மூலம் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து முதல் போட்டியில் வெற்றி கண்டது. இரண்டாவது டி-20 போட்டியிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை வென்ற நிலையில் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரரும் பாகிஸ்தான் அணியின் கேப்டனுமான பாபர் ஆஷாம் இல்லாத நிலையில் இந்த மோசமான தோல்விக்களை பாகிஸ்தான் அணி சந்தித்து வருகின்றது.


நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் இதற்கு முந்தைய தொடரான வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரையும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வென்று அசத்திய நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி -20 தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்.தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (இ), டாம் ப்ளண்டெல், ட்ரெண்ட் போல்ட், கைல் ஜேமீசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், நீல் வாக்னர், பி.ஜே. வாட்லிங் (wk), வில் யங்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News