வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான நியூசிலாந்து டி-20 அணி அறிவிப்பு.!
வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான நியூசிலாந்து டி-20 அணி அறிவிப்பு.!

By : Pravin kumar
நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது வெஸ்ட் இண்டிஸ் அணி. இந்த தொடர் நவம்பர் மாதம் 27ம் தேதி தொடங்க உள்ளது.
கொரோனா தொற்றிற்கு பிறகு நியூசிலாந்து அணி விளையாட உள்ள முதல் தொடர் இதுவாகும். வெஸ்ட் இண்டிஸ் அணி இதற்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு சுற்றுபயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
மேற்கு இந்திய தீவுகள் அணி ஏற்கனவே நியூசிலாந்து சுற்றுபயணத்திற்கான டெஸ்ட் மற்றும் டி-20 அணியை அறிவித்த நிலையில் இன்று நியூசிலாந்து அணி மூன்று டி-20 போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது. டி-20 போட்டிகளுக்கு டிம் சவுதி கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டெஸ்ட் தொடருக்கு தாயராக டி-20 போட்டிகளில் ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. கோலின் முன்ரோ தொடரில் இடம்பெறாத நிலையில் கப்தில், ராஸ் டெய்லர் போன்ற அனுபவ வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். புதிய வீரர்களும் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளனர்.
டி 20 அணி: டிம் சவுதி (கேப்டன்), ஹமிஷ் பென்னட், டெவன் கான்வே, லாக்கி பெர்குசன், மார்ட்டின் குப்டில், கைல் ஜேமீசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷாம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சீஃபர்ட்
