பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அதிரடி ஆட்டம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அதிரடி ஆட்டம்!

By : Pravin kumar
நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி-20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் மற்றும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள பை ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டாம் லேதம் 4 ரன்னிலும் பென்னெல் 5 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளிக்க நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நாயகன் கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த ரோஸ் டெய்லர் 70 ரன்கள் குவித்து அசத்தினார். ரோஸ் டெய்லர் 70 ரன்னில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ஹென்றி நிக்கோலஸ் வில்லியம்சனுடன் இணைந்து சிறப்பனா ஆட்டத்தை வெளிபடுத்தினார். நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 222-3 ரன்கள் சேர்த்தது. கேப்டன் வில்லியம்சன் 94 ரன்களுடனும் நிக்கோலஸ் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
