Kathir News
Begin typing your search above and press return to search.

டி20 உலக கோப்பை யாருக்கு: ஆஸி, நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை!

இருவது ஓவர் உலகக்கோப்பை போட்டியின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. முதன் முறையாக கோப்பையை வென்றகாக வேண்டும் என்று இரண்டு அணிகளும் களம் காண உள்ளது.

டி20 உலக கோப்பை யாருக்கு: ஆஸி, நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை!

ThangaveluBy : Thangavelu

  |  14 Nov 2021 3:32 AM GMT

இருவது ஓவர் உலகக்கோப்பை போட்டியின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. முதன் முறையாக கோப்பையை வென்றகாக வேண்டும் என்று இரண்டு அணிகளும் களம் காண உள்ளது.

2015ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு நியூசிலாந்து திட்டம் தீட்டியுள்ளது.இதற்கு முன்னர் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு 20 ஓவர் உலகக்கோப்பை இன்றளவும் எட்டாக்கனியாகவே அமைந்துள்ளது.

அதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஆஸ்திரேலியா அணி தீவிரமாக விளையாடும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் டி20 உலகக்கோப்பை போட்டியில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணி கோப்பையுடன் தாயகம் திரும்புமா என்று அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News