பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி.!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி.!

By : Pravin kumar
பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த சுற்றுபயணத்தின் முதல் டி-20 போட்டி நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரிஸ்வான் 17 ரன்கள் அடித்து அவுட் ஆக அடுத்த செஹ்ஷுவ் டக் அவுட் ஆக ஹைடர் அலி 3 ரன்களிலும் ஹப்பிஸ் அடுத்தாக டக் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 4 விக்கெட்கள் இழந்த நிலையில் 20 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது.

ஷாதாப் கான் 42 ரன்கள் அடித்து அவுட் ஆக இமாத் வாசிம் 19 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி 153/9 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர் டுப்பி மற்றும் குல்கிரிகின் பந்து வீச்சில் திணறியது பாகிஸ்தான் அணி.
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் கப்தில் 6 ரன்களில் அவுட் ஆகினார். செவுர்ட் அரைசதம் வீளாச கன்வாய் 5 ரன்கள் சேர்த்தது. பிலிப்ஸ் 23 ரன்கள் சேர்த்தது. செப்மான் 34 ரன்கள் அடித்த நிலையில் 18.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது ஆட்டநாயகனாக டுப்பி தேர்வுசெய்யப்பட்டார்.
