ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி!
By : Pravin kumar
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் டி-20 போட்டி நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்கெட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் அனுபவ வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் இடம்பெறாத நிலையில் பின்ச் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் கப்தில் டக் அவுட் ஆக அடுத்த வந்த கேப்டன் 12 ரன்னில் அவுட் ஆக அடுத்த ஜோடி சேர்ந்த கான்வே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் விளாச மறுமுனையில் பிளிப்ஸ் 30 ரன்களில் அவுட் ஆகினார்.
தொடர்ந்து விளையாடிய கான்வே 99 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 184/5 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப நியூசிலாந்து அணியின் போல்ட் மற்றும் சவுதி பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்தது. மிட்செல் மார்ஸ் 45 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் சொதப்ப ஆஸ்திரேலியா அணி 131/10 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. நியூசிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.