Kathir News
Begin typing your search above and press return to search.

தோனிக்கு இவர் உடன்பிறவா தம்பி.. மனம் திறந்த சிஎஸ்கே வீரர்..

தோனிக்கு இவர் உடன்பிறவா தம்பி.. மனம் திறந்த சிஎஸ்கே வீரர்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Sept 2023 11:13 AM IST

CSK அணியின் கேப்டன் தோனியும், நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் இருவரும் நெருங்கிய நட்பில் இருப்பவர்கள். தீபக் சஹர் குறித்து தோனி பேசுகையில், தீபக் சஹர் அருகில் இருந்தால் ஏன் இவர் அருகில் இருந்து தொல்லை செய்கிறார் என்று தோன்றும். ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் பொழுதும் இவர்கள் இருவரின் அதிகமான வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக வெளிவரும். மேலும் பல நேரங்களில் தோனி அவர்கள் இவரை கலாய்த்து பேசி இருக்கும் வீடியோக்களும் சமூக தளங்களில் அதிகம்.


அது மட்டும் கிடையாது நிறைய ஐபிஎல் தொடர்களின் போது தீபக் சாகர் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் போது, அந்த நேரத்தில் தோனி அவர்கள் நேரடியாக அவரிடம் வம்பு இழுப்பது அவர் முகத்திற்கு நிகராக பேட்டை எடுத்து செல்வது போல் கொண்டு சென்று அவரை மிரள வைப்பது போன்ற பல்வேறு செயல்களையும் தோனி அவர்கள் நகைச்சுவை உணர்வோடு செய்திருப்பார். இறுதிப்போட்டிக்கு பின் ஜெர்சியில் கையெழுத்து போட முடியாது என்று தோனி தீபக் சஹரிடம் வேற லெவலில் சேட்டையை கொடுத்தார்.


இதன் காரணமாக இரு நபர்களுக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் தகவல்கள் ஏற்கனவே பரவி இருந்தது. இன்னிலையில் தோனி குறித்து தீபக் பேசும் பொழுது, சென்னை அணியின் கேப்டன் தோனி எனக்கு ஒரு அண்ணனை போன்றவர். ஐபிஎல் தொடரின் போது எப்பொழுதும் என்னை கலாய்த்து கொண்டே இருப்பார். அவருடன் நான் தொடர்ந்து பல ஆண்டுகள் பயணித்து வருகிறேன் அவர் என்னை தம்பி போல் பாவித்து வருகிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News