முதல் ஓரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி!
By : Sushmitha
இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பஞ்சாப் மொகாலில் இன்று முதல் போட்டி நடைபெற்றது. மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து . முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்து ஆட்டத்தில் இறங்கியது. இதனால் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 52 ரன்களை எடுத்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் இங்லிஸ், ஸ்டீவன் ஸ்மித், லபுஸ்சங்கே, கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டாயின்ஸ் ஆகியோர் சுமார் 150க்கு மேல் ரன்களை அடித்து குவிக்க மற்ற சில ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் 4, 2, 2 என்ற ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
அதற்குப் பிறகு பேட்டிங் ஆடிய இந்திய அணி 277 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கியது. இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில், ருத்ராஜ் கெய்க்வாட், கேப்டன் கே. எல். ராகுல் ஆகியோர் அசத்தலாக பேட்டிங் ஆடி 48.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வென்றது.