ஆசிய விளையாட்டுப் போட்டி.. இந்தியாவிற்கு வலு சேர்க்கும் வீரர்கள், வீராங்கனைகள்..
By : Bharathi Latha
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியா மூன்று தங்கம், ஏழு வெள்ளி, ஐந்து வெண்கலத்தை தன்வசப்படுத்து இருக்கிறது. பதக்க பட்டியலில் இந்தியாவிற்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு வீராங்கனைகள் வீரர்கள் தங்களுடைய அட்டகாசமான திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆசிய விளையாட்டு போட்டியின் 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மும்முரமாக பங்கேற்றுள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தியுள்ளார். 8 நிமிடம் 19.54 வினாடிகளில் இலக்கை கடந்து பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு 12 தங்கம் கிடைத்துள்ளது.
இந்தியா தற்பொழுது நான்காம் இடத்தில் இருக்கிறது. சீனா தென் கொரியா ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் மூன்று நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு இந்திய வீரர்கள் தங்களுடைய திறமைகளை நிச்சயம் வெளிக்காட்டி வருகிறார்கள். முழுமையான முயற்சியுடன் அவர்கள் காட்டிய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News