ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. இந்திய விளையாட்டு வீரர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி..
By : Bharathi Latha
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் மைதானத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தப் போட்டிகளில் இந்தியா 28 தங்கப் பதக்கங்கள் உட்பட 107 பதக்கங்களை வென்றது, இது கான்டினென்டல் மல்டி ஸ்போர்ட்ஸ் பிரிவில் வென்ற மொத்தப் பதக்கங்களின் அடிப்படையில் சிறந்த செயல்திறன் ஆகும்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு குடிமகன் சார்பிலும் அவர்களை வரவேற்று, அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். 1951-ம் ஆண்டு இதே மைதானத்தில்தான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு என்று பிரதமர் நினைவுகூர்ந்தார். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் காட்டிய துணிவும், உறுதியும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். 100-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் என்ற இலக்கை அடைய பாடுபட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், ஒட்டுமொத்த தேசமும் பெருமித உணர்வை அனுபவித்து வருவதாகக் கூறி வலியுறுத்தினார்.
பயிற்சியாளர்களைப் பாராட்டிய அவர், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்களிப்புகளையும் பாராட்டினார். அனைத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் பெற்றோருக்கும் தலைவணங்கிய பிரதமர், அவர்களின் குடும்பங்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்களை எடுத்துரைத்தார். “பயிற்சி மைதானத்தில் இருந்து மேடை வரை, பெற்றோரின் ஆதரவு இல்லாமல் பயணம் சாத்தியமாகி இருக்காது” என்று பிரதமர் கூறினார்.“நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் புள்ளிவிவரங்கள் இந்தியாவின் வெற்றிக்கு சாட்சி. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்திறன் இதுவாகும். நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பது தனிப்பட்ட திருப்திக்குரிய விஷயம்” என்று அவர் தெரிவித்தார்.
Input & Image courtesy: News