உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ரோகித் ஷர்மாவின் சாதனை..
By : Bharathi Latha
இந்திய கேப்டன் ரோகித் சர்மா உலக கோப்பை கிரிக்கெட்டில் தற்பொழுது புதிய சாதனை படைத்திருக்கிறார். இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா இரண்டாவது வெற்றியை நேற்று கொண்டாடியது. குறிப்பாக ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா தன்னுடைய நிலையான இலக்கை பதிவு செய்து இருக்கிறது. இந்த ஒரு ஆட்டத்தில் தான் ரோகித் சர்மா அவர்கள் புதிய ஒரு வரலாறு சாதனையை படைத்து இருக்கிறார்.
குறிப்பாக டாஸ்க் ஜெயித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டிங்க்கு சாதகமான இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். நன்றாக விளையாடி இருந்தாலும் இந்திய அணி அவர்களை விட சிறப்பாக விளையாடி இந்த ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் நேற்று ஒரே நாளில் பல்வேறு சாதனைகளை கடந்தார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 131 ரன்கள் குறித்து ரசிகர்களின் ஆச்சரியப்படுத்தினார் அவரது ஏழாவது சதம் இதுவாகும்.
இதன் மூலம் 45 ஆண்டுகால உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு அதிக சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். அதற்கு முன்பு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் அடித்தது அதிகபட்ச சாதனையாக இருந்தது. ஆனால் டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். ஆனால் ரோகித் சர்மா வெறும் மூன்று உலக கோப்பை தொடரிலேயே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
Input & Image courtesy:News