Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி.. வெள்ளி பதக்கத்தை வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் பாராட்டு..

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி.. வெள்ளி பதக்கத்தை வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் பாராட்டு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Oct 2023 4:31 AM GMT

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சைலேஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சைலேஷ் குமாருக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது, "ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற சைலேஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் அவரது செயல்திறன் அசாதாரணமானது. அவரது உறுதியும், கடின உழைப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.


அதுபோல சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் குண்டு எறிதல் எஃப் 11 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மோனு கங்காஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News