Kathir News
Begin typing your search above and press return to search.

கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கரின் முழு உருவ சிலை.. மும்பை திறப்பு விழா..

கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கரின் முழு உருவ சிலை.. மும்பை திறப்பு விழா..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Nov 2023 8:35 AM IST

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் உள்ளிட்ட பல்வேறு சாதனையாளர்களுக்கு சொந்தக்காரர் ஆவார். இதற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை விழா செய்ய ஒரே வீரர் என்று பெருமைக்குரிய டெண்டுல்கர் மும்பையை சேர்ந்தவர் ஆவார். மராட்டிய மாநிலம் தலைநகர் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் எதிராக தனது 200 வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றர்.


அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி சுமார் 15 சதங்களுடன் 15921 ரன்கள் மற்றும் 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களுடன் 18,426 ரன்கள் குறித்து இருக்கிறார். சாதனை நாயகன், கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கரின் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.


கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார். டெண்டுல்கர் அவர்களின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவருடைய பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவருக்கு முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அதனுடைய திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News