டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்.. அதுவும் இவ்வளவு சிறிய வயதிலா..
By : Bharathi Latha
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் 23 வயதான ஆல் ரவுண்டர் ரச்சின் ரவிந்த்ரா தன்னுடைய அற்புதமான திறனை வெளிக்காட்டு இருந்தார். குறிப்பாக இவர் நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 23 வயதான இவர் நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டங்களை சதம் அடித்து இருந்தார்.
நடப்பு உலக கோப்பை தொடரில் அவரின் மூன்றாவது சதம் இதுவாகும். ஏற்கனவே இவர் 2 சதம், தற்பொழுது நேற்று முன்தினம் ஆட்டத்தில் மூன்று மூன்றாவது சதம் எடுத்தார். இதன் மூலம் 25 வயதுக்கு முன் உலக கோப்பை போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்து இருக்கிறார். இதற்கு முன்பு இந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இரண்டு சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நேற்று இவர் முறியடித்து இருக்கிறார்.
மேலும் ரச்சின் இதுவரை 523 ரன்கள் குவித்து இருப்பதன் மூலம் உலக கோப்பை போட்டியில் குறைந்த வயதில் அதிக ரன்கள் சேர்த்த டெண்டுல்கரின் சாதனையை இவர் சமன் செய்தார். ரன் எடுப்பதில் அடுத்த ஆட்டத்தில் டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக வட்டார தரப்பில் கூறப்படுகிறது. அது மட்டும் கிடையாது உலக கோப்பை போட்டியில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். 3 சதம் முதல் வீரர் என்று அறிய சாதனையும் இவர் படித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News