Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி.. தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி..

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி.. தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Nov 2023 6:11 AM GMT

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2023-ல் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் வாழ்த்து. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2023 போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். அது மட்டும் கிடையாது இந்திய மக்கள் அனைவரும் ஆசிரிய சாம்பியன்ஸ் குப்பை 2023 தங்கம் பதக்கம் வென்று இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு தன்னுடைய பாராட்டுகளை தொடர்ச்சியாக வண்ணம் தெரிவித்து வருகிறார்கள்.


இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது, "இந்தியாவின் மகளிர் சக்தி மீண்டும் சிறப்பாக சாதனை படைத்துள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2023-ல் மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற நமது நட்சத்திர ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். அவர்களின் அசாத்திய திறமை, அசைக்க முடியாத ஆர்வம், இடைவிடாத உறுதி ஆகியவை நம் இதயங்களை பெருமிதத்தால் நிரப்பியுள்ளன.


சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை உயர்த்திய சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்!” என்று மோடி அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பெண்கள் விளையாட்டு முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது எனவே இந்தியாவில் இருக்கும் வீராங்கனைகளுக்கு உத்வேகம் தரும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தற்போது தங்கப்பதக்கம் வென்று இருப்பது இந்தியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News