பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் மோதுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா...
By : Bharathi Latha
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சாம்பியன் ஆன பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தற்போது நான்கு வெற்றிகள் மற்றும் நான்கு தோல்விகள் என்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்திய ரசிகர்கள் அனைவரும் இந்தியா பாகிஸ்தான் விளையாடுவது குறித்து மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்திய பாகிஸ்தான் இடையிலான ஆட்டங்கள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் அதிக தரப்பு ரசிகர்களை பெற்று இருக்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே அரை இறுதிக்கு இந்திய அணி முதல் அணியாக தொகுதி பெற்றிருந்த நிலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு போவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற ஒரு சூழல் தற்போது அமைதி இருக்கிறது. பாகிஸ்தான் தனது கடைசி லீக் இங்கிலாந்து அணியை நாளை சந்திக்க இருக்கிறது. இந்த ஆட்டத்தில் தான் அரை இறுதிக்கு பாகிஸ்தான் செல்லுமா என்பது குறித்தான முடிவு வெளியாகும். பாகிஸ்தான் 287 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தில் வீழ்த்தினால் மட்டுமே 10 புள்ளிகள் உடன் நியூசிலாந்தின் ரன் பேட்டை முந்த முடியும்.
இவ்வாறு நடந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்வதற்கான அதிர்ஷ்டம் உருவாக்கும். ஒருவேளை இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் எடுத்தால் அந்த இலக்கை பாகிஸ்தான் 3.4 ஓவர்களிலேயே எட்டிப் பிடிக்க வேண்டும். இப்படி எல்லா வகைகளிலும் பாகிஸ்தானுக்கு சவாலான சூழ்நிலை இருக்கிறது. எனவே அரை இறுதிக்கு பாகிஸ்தான் செல்வது சந்தேகம் தான்.
Input & Image courtesy: News