உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. வெற்றிப் பாதையில் பயணத்தை தொடருமா இந்திய அணி..
By : Bharathi Latha
பத்து அணிகள் பங்கேற்கும் 13 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி இந்தியாவில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரை இறுதி வாய்ப்புக்கு நான்கு அணிகள் இறுதிப்போட்டியில் மோத இருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றன.
இந்த இரண்டு போட்டிகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அத்தகைய இறுதிப்போட்டி வெல்லும் ஒரு அணிக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெற்றியாளர் என்று பெயர் கொடுக்கப்படும். இதுவரை இந்தியா எந்த ஒரு போட்டியிலும் விட்டுக் கொடுக்காமல் ஆறுமுறையும் தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தத்தை அரை இறுதிக்கு சுலபமாக நுழைந்துவிட்டது.
நியூசிலாந்துடன் எதிர்கொள்ளும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு சுலபமாக கிடைத்துவிடும். இந்திய அணி வீரர்கள் அனைவரும் உற்சாகத்துடன் இந்த ஒரு போட்டியில் பங்கேற்று வருகிறார்கள். ஏனென்றால் தீபாவளி கொண்டாட்டத்திற்கு இந்திய ரசிகர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக உலகக்கோப்பை தொடர் வெற்றி அமையும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.
Input & Image courtesy: News