Kathir News
Begin typing your search above and press return to search.

இதுதாங்க உண்மையான தீபாவளி.. இந்தியா அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்..

இதுதாங்க உண்மையான தீபாவளி.. இந்தியா அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Nov 2023 3:17 AM GMT

13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் சிறப்பாக தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக அரை இறுதிக்கு அணிகள் முன்னேறி இருக்கிறது இதில் இந்திய அணி அரை இறுதியில் இருந்து இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. குறிப்பாக தீபாவளி பரிசாக அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஸ்வீட்டை இந்திய அணியினர் தந்திருக்கிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து இந்திய அணியினரை பலரும் பாராட்டு வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இந்திய அணி வீரர்களை பாராட்டு இருக்கிறார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டுள்ளதாவது, "நமது கிரிக்கெட் அணியின் அற்புதமான செயல்பாட்டினால் தீபாவளி இன்னும் சிறப்பானதாக அமைந்தது. நெதர்லாந்திற்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! இது, திறமை மற்றும் அணி முயற்சியின் அற்புதமான வெளிப்பாடு. அரையிறுதிக்கு வாழ்த்துகள்! இந்தியா மகிழ்ச்சியில் திளைக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News