இந்திய அணியின் விளையாட்டு விதம் திருப்தி அளிக்கிறது.. ரோகித் சர்மா கருத்து..
By : Bharathi Latha
இந்திய அணி தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வருகிறது. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய அற்புதமான திறனின் வழி காட்டி வருகிறது. இதுவரை எதிர்கொண்ட 9 ஆட்டங்களில் தொடர்ந்து இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. இதன் காரணமாக மற்றும் உலக நாடுகளின் கண்கள் முழுவதும் இந்தியாவின் மீதுதான் இருக்கிறது வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் பேட்டி அளித்து இருக்கிறார். அந்த பேட்டியில் இது பற்றி அவர் கூறும் பொழுது, இந்த உலக கோப்பை தொடங்கியதில் இருந்த எங்களுக்கு பொருத்தவரை ஒரே நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுவது என்பதை இலக்காக வைத்து இருந்தோம்.
இது நீண்ட தொடர் என்பதால் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த போட்டியையும் நினைத்து ஆடவில்லை அது மட்டும் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான சூழ்நிலையில் விளையாடுவதற்கு ஏற்ப நம்ம மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆட்டங்களில் விளையாடிய விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு வீரர் பொறுப்பு எடுத்துக்கொண்டு சிறந்த ஆட்டத்தை இந்திய அணியின் சார்பாக வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு உயிரினும் பொறுப்பை உணர்ந்து அணிக்காக தங்களது பணியை செய்ய விரும்புவது ஒரு நல்ல அறிகுறி ஆகும். முதல் நான்கு ஆட்டங்களில் தொடர்ச்சியாக இலக்கை விரட்டி பிடித்து இருக்கிறார்கள்.
அதன் பிறகு முதல் பேட்டிங் செய்தோம் பேட்ஸ்மேன் கணிசமாக ரன்களை குவித்த நிலையில் சுழற் பந்து வீச்சாளர்கள் இணைந்து, வேகபந்து வீச்சாளர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள். வீரர்களில் ஓய்வறையை உற்சாகமான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டிய முடிவுகள் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இந்த ஒரு ஆற்றல் மிகச் சிறப்பாக தங்களுடைய திறமையை வெளிப்படுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
Input & Image courtesy: News