உலகக் கோப்பை இறுதிப் போட்டி.. இந்திய அணி வருமா.. ஜோதிடர் கருத்து என்ன?
By : Bharathi Latha
உலகக் கோப்பை தொடர் போட்டியில் இறுதிப் போட்டியில் இரண்டு முறை சாம்பியனான இந்தியாவும், 5 முறை சாம்பியனுமான ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. கிரிக்கெட் தரப்பில் இருந்தும், பிரபலங்கள், ரசிகர்கள் தரப்பில் இருந்தும் பலரும் தங்களின் கணிப்புகளை அள்ளி வீசும் நிலையில், ஜோதிட ரீதியாகவும் பலரும் தங்களின் கணிப்பை தெரிவித்து வருகின்றனர். இந்தியா -ஆஸ்திரேலியா என இரு வீரர்களையும் ஜோதிட ரீதியாக எடுத்துச்சொல்லி பிரபல ஜோதிடர் ஒருவர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரபல ஜோதிடர் ஜகன்னாத் குருஜி கூறுகையில், "ஜோதிட ரீதியாக இரு நாட்டையும் கணக்கில் எடுத்து பார்க்கும்போது ஆஸ்திரேலியாவை விட இந்தியாவுக்குதான் அதிக வாய்ப்பிருக்கிறது என்றார். குறிப்பாக, இந்திய அணி கோப்பையை தூக்கவே அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறுகின்றனர். இந்திய அணியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் அவர் கூறும் போது, "இந்த உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் ஜாதகம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
இது அவரது தலைமைத்துவத் திறமைக்கு உதவியது. மேலும், ரோஹித்தின் கிரக நிலைகளும் சீரமைப்பும் 2011 உலகக் கோப்பையில் மகேந்திர சிங் தோனிக்கு இருந்ததை போலவே உள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் உலக கோப்பையை தனது அணிக்காக வெற்றி தரும் வாய்ப்பு அவருடைய ஜாதகத்திற்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
Input & Image courtesy: News