"இவ்விருவர் இருக்கும் வரை மும்பை அணியை யாரும் வீழ்த்த முடியாது" - ரோஹித் சர்மா!
"இவ்விருவர் இருக்கும் வரை மும்பை அணியை யாரும் வீழ்த்த முடியாது" - ரோஹித் சர்மா!

By : Pravin kumar
ஐபிஎல் 2020 தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப்ஸ் சுற்று போட்டிகள் ஆரம்பம் ஆகி உள்ளனர். இந்நிலையில் பிளே ஆப்ஸ் சுற்றி முதல் போட்டியான குவாலிபையர் 1 போட்டி திட்டமிட்ட படி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. புள்ளி பட்டியிலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் விளையாடிய மும்பை அணியில் டி காக் 40 ரன்களும் சூரியக்குமார் யாதவ் 51 ரன்களும் சேர்த்து மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க இஷன் கிஷன் 55 ரன்களும் ஹர்டிக் பாண்டிய 37 ரன்களும் கடைசி ஓவர்களில் அடித்து கொடுக்க மும்பை அணி 200 ரன்கள் சேர்தது. பின்னர் விளையாடிய டெல்லி அணி மோசமான தொடக்கத்தின் காரணமாக 143 ரன்கள் மட்டுமே அடித்தது. மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்ஸ்மேன்களை பெருமையாக பேசியது மட்டுமின்றி தங்களது அணியில் உள்ள பவுலர்களையும் பாராட்டினார். இதுகுறித்து அவர் பேசுகையில் : எங்கள் அணியில் பும்ரா. போல்ட் ஆகிய இருவரும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள். அவர்கள் இத்தொடர் முழுவதுமே தங்களது திடமான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். பல்வேறு அணிகளுக்கு எதிராக பல்வேறு ஆட்டங்களில் விளையாடிய அவர்களால் சிறப்பாக திட்டமிட்டு பந்து வீச முடியும்.
அதனை இந்த போட்டியிலும் அவர்கள் நிரூபித்துள்ளார்கள். மேலும் அனைத்துப் போட்டிகளிலும் அவர்கள் வெவ்வேறு திட்டத்துடன் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசி வருகிறார்கள். அவர்களது திட்டங்களும், பந்துவீச்சும் நினைத்தது போன்றே செயல்படுத்தி வருகிறார்கள். அதுவும் எங்கள் அணிக்கு மிகப்பெரிய பலம் என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.
