Kathir News
Begin typing your search above and press return to search.

மும்பை டெஸ்ட் போட்டி: 62 ரன்களில் ஆல் அவுட்டான நியூசிலாந்து!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 62 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

மும்பை டெஸ்ட் போட்டி: 62 ரன்களில் ஆல் அவுட்டான நியூசிலாந்து!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 Dec 2021 11:02 AM GMT

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 62 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா 325 ரன்களில் ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் அபாரமாக பந்துவீசி 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதனிடையே முதல் இன்னிங்ஸ் போட்டியில் பேட்டிங் செய்ய ஆரம்பித்த நியூசிலாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் திறன்படைத்த வேகப்பந்தையும், சுழற்பந்து வீச்சையும் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டத்தை இழந்தனர். மேலும், இந்திய தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார். அக்ஸர் படேல் 2 விக்கெட்டையும், ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News