Kathir News
Begin typing your search above and press return to search.

T20WC : முதல் போட்டியில் ஓமன் அபார வெற்றி !

T20WC : முதல் போட்டியில் ஓமன் அபார வெற்றி !

DhivakarBy : Dhivakar

  |  17 Oct 2021 2:04 PM GMT

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் பப்புவா நியூ கினியா அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்தது

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 38 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை உறுதி செய்தனர்.இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை ஓமன் பதிவு செய்துள்ளது.

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News