Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 297 ரன்களுக்கு ஆல்அவுட்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 297 ரன்களுக்கு ஆல்அவுட்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 297 ரன்களுக்கு ஆல்அவுட்!

Pravin kumarBy : Pravin kumar

  |  3 Jan 2021 6:22 PM GMT

நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணி மூன்று டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. டி-20 தொடரை நியூசிலாந்து அணி வென்ற நிலையில் முதல் டெஸ்ட் போட்டியையும் பாகிஸ்தான் அணியிடம் இருந்து வெற்றியை தட்டி சென்றது.


இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் உள்ள கிரிஸ்சார்ல் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் மாசூத் டக் அவுட் ஆக பின்னர் வந்த அசிட் அலி மற்றும் ஆஷார் அலி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அசிட் அலி 25 ரன்கள் அடித்து அவுட் ஆக பின்னர் வந்த ஹாரிஸ் சோயில் 1 ரன்னிலும் ஆலாம் 2 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதை தொடர்ந்து கேப்டன் ரிஸ்வான் 61 ரன்கள் சேர்க்க பின்னர் ஆஷார் அலி 93 ரன்னில் அவுட் ஆகினார்.

பின்னர் பாஹிம் அஸ்ரப் 48 ரன்கள் அடித்து அவுட் ஆக பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 297 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து அணியில் ஜமிக்ஸன் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். சவுதி மற்றும் போல்ட் தலா இரண்டு விக்கெட்களை வீழத்தினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News