வலுவான இந்திய அணிக்கு எதிராக மோசமான இங்கிலாந்து அணி என பிட்டர்சன் விமர்சனம்!
வலுவான இந்திய அணிக்கு எதிராக மோசமான இங்கிலாந்து அணி என பிட்டர்சன் விமர்சனம்!
By : Pravin kumar
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே பிப்ரவரி மாதம் மிக நீண்ட தொடர் நடக்க இருக்கிறது இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாட இருக்கிறது.பிப்ரவரி மாதம் 5ம் தேதியிலிருந்து இந்த இரு அணிகளுக்கிடையேயான தொடர்கள் தொடங்குகிறது. இந்த இரு அணிகளும் முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து அணி 16 பேர் கொண்ட தனது அணியை அறிவித்து இருக்கிறது. இந்த அணியின் கேப்டனாக ஜோ ரூட் இருக்கிறார். மற்றபடி ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அதனைத் தாண்டிப் பல புதுமுக வீரர்களும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த 16 பேரை தவிர தற்காப்பிற்காக, முன்னெச்சரிக்கையாக 6 வீரர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஜோ ரூட் (கேப்டன்), ஜாஃப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பேர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கேவின் பிட்டர்சன் இங்கிலாந்து அணி அறிவிக்கபட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியாதாவது வலுவான இந்திய அணிக்கு எதிராக மோசமான இங்கிலாந்து அணி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. என கூறியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு பெரிய ஆபாத்தாக அமையும் எனவும் கூறியுள்ளார்.