இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் விளையாட்டுத் துறை - பிரதமர் மோடி!
ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றினார்.
By : Bharathi Latha
ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். விழாவில் கபடி போட்டியையும் அவர் பார்வையிட்டார். ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 2017 ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் மகாகேல் விழாவை நடத்தி வருகிறார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்த மெகா போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் பங்கேற்பதற்காக மட்டும் வீரர்கள் விளையாடவில்லை, வெற்றி பெறவும், கற்றுக் கொள்வதற்காகவும் விளையாட்டுத் துறையை அலங்கரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
“கற்றல் ஈடுபாடு இருந்தால் வெற்றி உறுதி”, எந்த ஒரு வீரரும் விளையாட்டுத் துறையை வெறுங்கையுடன் விட்டுவிடுவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் போட்டியில் இந்தியாவின் பெயரை விளையாட்டுத் துறையில் புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்ற பல புகழ்பெற்ற வீரர்களான ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற ராம் சிங், தியான்சந்த் கேல் ரத்னா விருது பெற்ற பாரா தடகள வீரர் தேவேந்திரன், அர்ஜுன் விருது பெற்ற சாக்ஷி குமாரி ஆகியோரின் பெயர்களைக்குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் புகழ்பெற்ற பல மூத்த விளையாட்டு வீரர்கள், ஜெய்ப்பூர் மஹாகேலில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கேல் மகாகும்ப் விழாக்களின் தொடர் நிகழ்வுகள் மகத்தான மாற்றங்களின் பிரதிபலிப்பாகும் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். ராஜஸ்தான் மாநிலம் இளைஞர்களின் ஆர்வத்துக்கும் வீரியத்துக்கும் பெயர் பெற்றதாகக் குறிப்பிட்ட பிரதமர், மண்ணின் பிள்ளைகள் தங்கள் வீரத்தால் போர்க்களங்களை விளையாட்டுக் களமாக மாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு சரித்திரமே சான்று என்றார்.
Input & Image courtesy: News