ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பிரதமர்!
தோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து.
By : Bharathi Latha
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராbதோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்து வந்துள்ளார். கடந்த ஆண்டை விடவும் நீரஜ் சோப்ராவின் ஆற்றல் மேம்பட்டுள்ளது. வழக்கமாக முதல் வாய்ப்பில் அதிக தூரம் வீசிய பின், அடுத்தடுத்த வாய்ப்புகளில் குறைந்த தூரம் மட்டுமே ஈட்டியை எறிந்து வந்தார். கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.
2022 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, நடப்பு ஆண்டிலும் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆனால் இந்த போட்டிகளில் முதல் வாய்ப்பில் 88.67 மீட்டர் தூரமும், இரண்டாம் வாய்ப்பில் 86.07 மீட்டர் தூரமும், மூன்றாம் வாய்ப்பில் 85.47 மீட்டர் தூரமும், கடைசி வாய்ப்பில் 84.37 மீட்டர் தூரமும் ஈட்டியை எறிந்தார்.
தோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், "உலக அளவில் 88.67 மீ தூரம் ஈட்டி எறிதலுடன் நீரஜ் சோப்ரா தோஹா டைமண்ட் லீக்கில் பிரகாசித்து உள்ளார். அவருக்கு வாழ்த்துகள். முன்னேற்றத்திற்கான அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
Input & Image courtesy: News