Kathir News
Begin typing your search above and press return to search.

சாம்பியன் பட்டம்: பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சாம்பியன் பட்டம்: பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ThangaveluBy : Thangavelu

  |  28 March 2022 10:22 AM GMT

சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் நேற்று (மார்ச் 27) நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் உள்ளிட்டோர் விளையாடினர். இதில் பி.வி.சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பூசணனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்நிலையில், பி.வி.சிந்து பெற்ற வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். இது பற்றி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், சுவிஸ் ஓபன் 2022ல் வெற்றி பெற்றமைக்காக சிந்துவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது வெற்றியால் இந்தியாவில் உள்ள இளைய சமூகத்தினருக்கு ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Maalaimalar

Image Courtesy: Zee News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News