தென் ஆப்ரிக்காவை 220 ரன்னில் சுருட்டிய பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்த ராபாடா!
தென் ஆப்ரிக்காவை 220 ரன்னில் சுருட்டிய பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்த ராபாடா!
By : Pravin kumar
பாகிஸ்தான் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றுது. தென் ஆப்ரிக்கா அணி ஏறத்தால 13 வருங்களுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள காராட்சி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் பாபர் ஆசாம் தலைமையில் பாகிஸ்தான் அணியும் குயிடன் டி காக் தலைமையில் தென் ஆப்ரிக்கா அணியும் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டி காக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்கம் சிறப்பாக அமைந்தது.
எல்கர் அதிரடி தொடக்கம் கொடுக்க மார்க்ரம் 13 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த டுஸ்ஸான் 17 ரன்னில் ரன்அவுட் ஆக பின்னர் வந்த டு ப்ளஸிஸ் 23 ரன்னில் வெளியேற கேப்டன் டி காக் 15 ரன்னில் அவரும் அவுட் ஆகினார்.
அதை தொடந்து விளையாடிய பவுமா 17 ரன்னில் வெளியேற லின்டே 35 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். தென் ஆப்ரிக்கா அணி 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்கமே சரிவை சந்தித்தது.
தொடக்க வீரர்கள் இம்ரான் பட் 9 ரன்னில் அவுட் ஆக பின்னர் அசிட் அலி 4 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். பாபர் ஆஷாம் 7 ரன்னில் அவுட் ஆக பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 33-4 என்ற நிலையை அடைந்தது.