ஆஸ்திரேலியா தொடரில் முடிவில் குல்திப் மற்றும் தியாகிக்கு ஆறுதல் கூறிய ராஹனே!
ஆஸ்திரேலியா தொடரில் முடிவில் குல்திப் மற்றும் தியாகிக்கு ஆறுதல் கூறிய ராஹனே!
By : Pravin kumar
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. அடிலெய்ட் டெஸ்டில் இந்திய அணி வெறும் 36 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்ததால் இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 4-0 என இழந்து விடும் என்று முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்தனர்.
ஆனால் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் டெஸ்டில் பெற்ற அதிரடி வெற்றியால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி விமர்சனம் செய்த அனைவருக்கும் தக்க பதிலடி கொடுத்தது. ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்களான முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நடராஜன்,நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடியிருந்தனர்.
இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றியையும் சீனியர் வீரர்கள் இல்லாத போது அவர்களுக்கு பதிலாக சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்திய அணியின் இந்த வெற்றி பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் இந்த வரலாற்று சாதனை வெற்றிக்கு பிறகு இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஓய்வறையில் இந்திய வீரர்களுடன் உரையாடி இருக்கிறார். அப்போது ரவி சாஸ்திரி இந்திய அனுபவ வீரர்களான புஜாரா, அஸ்வின், ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் அறிமுக வீரர்களான சுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் என அனைவரையும் பாராட்டி பேசி இருக்கிறார்.
அந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.இதைத் தொடர்ந்து பேசிய இந்திய கேப்டன் ரகானே “ அடிலெய்ட் மைதானத்தில் அடைந்த மோசமான தோல்விக்கு பின் இந்த வரலாற்று வெற்றி நமக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.
இதனை நம்மால் எப்பொழுதும் மறக்க முடியாது. இந்த வரலாற்று வெற்றிக்கு நம் அனைவரது கடினமான உழைப்பு தான் காரணம். ஆனால் குல்தீப் யாதவ் மற்றும் கார்த்திகா தியாகி ஆகியோர் ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது.
உங்களது உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக நீங்கள் சோர்வு அடைந்து விடாதீர்கள். உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை போராட வேண்டும்” என்று உரையாடி இருக்கிறார் இந்திய கேப்டன் ரகானே.