இந்திய அணியில் இஷாந்த் சார்மாவை மிஸ் செய்வதாக ரஹானே வருத்தம்.!
இந்திய அணியில் இஷாந்த் சார்மாவை மிஸ் செய்வதாக ரஹானே வருத்தம்.!

By : Pravin kumar
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், அடுத்ததாக நடைபெற்ற டி.20 தொடரை 2-1 என்ற இந்திய அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துவங்க உள்ளது.

காயம் காரணமாக இந்திய அணியில் ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி, சீன் அப்போட், கேமரூன் கிரீன் ஆகியோரும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்புவதாக கூறியுள்ளார். இதனால் மீதமுள்ள 3 போட்டிக்கு ரஹானேவின் தலைமையில் இந்திய செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின்போது காயமடைந்த இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா குறித்து அஜின்கியா ரஹானே பேசியுள்ளார். அவர் கூறுகையில் “ அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை இன்னும் தேர்வு செய்யவில்லை.
எங்கள் அணியில் தற்போது வேகப்பந்துவீச்சு மாபெரும் பலத்துடன் இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் 20 விக்கெட்டை வீழ்த்துவதற்கான திறமை எங்களிடம் உள்ளது. ஒரு ஆல்-ரவுண்டராக அஸ்வினின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். இருப்பினும் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான . இஷாந்த் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு. இஷாந்த் சர்மாவை நாங்கள் மிஸ் பண்ணுகிறோம்” என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார்.
