Kathir News
Begin typing your search above and press return to search.

தென்னாப்பிரிக்காவில் புத்தாண்டு கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள், புத்தாண்டு கொண்டாடியுள்ள புகைப்படத்தை அஷ்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் புத்தாண்டு கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  1 Jan 2022 8:19 AM GMT

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள், புத்தாண்டு கொண்டாடியுள்ள புகைப்படத்தை அஷ்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது. இதில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.


இந்நிலையில், ஆங்கில் புத்தாண்டை முன்னிட்டு செஞ்சுரியனில் தங்கியுள்ள ஹோட்டலில் இந்திய அணி வீரர்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இதில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டெஸ்ட் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்திய அணியின் வீரர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். அதனை கிரிக்கெட் வீரர் அஷ்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் ரீ ட்விட் செய்து வருகின்றனர்.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News