ரிஷப் பண்ட் சிறந்த மேட்ச் வின்னர் என ரவி சாஸ்திரி புகழாரம்!
ரிஷப் பண்ட் சிறந்த மேட்ச் வின்னர் என ரவி சாஸ்திரி புகழாரம்!
By : Pravin kumar
ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றியையும் சீனியர் வீரர்கள் இல்லாத போது அவர்களுக்கு பதிலாக சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பரான சாஹா முதல் டெஸ்ட் போட்டியில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனால் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சாஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம்பெற்றார்.ரிஷப் பண்ட் சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் 97 ரன்கள், பிரிஸ்பேனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் 89 ரன்கள் என அதிரடியாக விளையாடி இருக்கிறார். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் இரண்டு கேட்ச்சுகளைத் தவிர விட்டிருந்தார். இதன் காரணமாக பண்ட்டை அனைவரும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடிய பண்ட் குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசியிருக்கிறார். ரவிசாஸ்திரி பேசுகையில் “ ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னர். இதனால் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவரை தேர்வு செய்தோம். அவரது விக்கெட் கீப்பிங்கை அனைவரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.ஆனால் அவரது பேட்டிங் குறித்து யாரும் பேசுவதில்லை. அவர் இது போன்ற கடினமான சூழ்நிலையில் தனது பேட்டிங் மூலம் அணியை வெற்றி பெற வைப்பார். சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 97 ரன்கள் குவித்து இருந்தார். இன்னும் சில நேரம் விளையாடி இருந்தால் அவர் அந்த போட்டியை வெற்றிபெற வைத்திருப்பார்.ரிஷப் பண்ட் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று என்பதால் தான் இந்திய அணியில் அவரை தேர்வு செய்கிறோம்” என்று ரவிசாஸ்திரி விளக்கம் அளித்திருக்கிறார். பிரிஸ்பேனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் பண்ட் 89 ரன்கள் குவித்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு மேட்ச் வின்னர் பட்டம் வழங்கப்பட்டது.