Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் புதிய சாதனையை படைத்த ரவிசந்திர அஸ்வின்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் புதிய சாதனையை படைத்த ரவிசந்திர அஸ்வின்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் புதிய சாதனையை படைத்த ரவிசந்திர அஸ்வின்!

Pravin kumarBy : Pravin kumar

  |  15 Feb 2021 8:54 AM GMT

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார். இதழ் சுப்மன் கீழ் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோன் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அடுத்து வந்த புஜாரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது 58 பந்துகள் மட்டுமே பிடித்து 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி தடுமாற்றம் கண்டது. அதில் இருந்து மீள்வதற்குள் அடுத்த வந்த இந்திய கேப்டன் விராட் கோலியும் 5 பந்துகளை பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் மொய்ன் அலி வீசிய துல்லியமான சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தார்.

ஒருபக்கம்விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ரோஹித் சர்மா, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டு சதம் அடித்து அசத்தினார்.சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடிய ரோஹித், 150 ரன்களை கடந்தார். ரோஹித்தும் ரஹானேவும் இணைந்து ஆடி 4வது விக்கெட்டுக்கு 162 ரன்களை குவித்தனர்.

இரட்டை சதத்தை நோக்கி ரோஹித்தும் சதத்தை நோக்கி ரஹானேவும் ஆடிக்கொண்டிருந்த நிலையில், ரோஹித்தை 161 ரன்னில் வீழ்த்தி ஜாக் லீச் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ரோஹித் அவுட்டான அடுத்த ஒருசில ஓவர்களிலேயே ரஹானே 67 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சிறிது நேரம் தாக்குபிடித்த அஸ்வின் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இதன் மூலம் முதல் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 300 ரன்கள் குவித்திருந்தது.இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அக்‌ஷர் பட்டேல் (5), இஷாந்த் சர்மா (0), குல்தீப் யாதவ் (0) மற்றும் முகமது சிராஜ் (4) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் இறுதி வரை ஆட்டமிழக்காத ரிஷப் பண்ட் 58 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் துவக்க வீரரான ரோரி பர்ன்ஸ் இஷாந்த் சர்மா வீசிய போட்டியின் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

மற்றொரு துவக்க வீரரான டாமினிக் சில்பி (16) அஸ்வினின் சுழலிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (6) அகஷர் பட்டேல் சுழலிலும் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதன் மூலம், 23 ரன்களுக்கே மூன்று முக்கிய விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தது.அடுத்தடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் (18) அஸ்வின் சுழலிலும், ஓலி போப் (22) ரிஷப் பண்ட்டின் மிரட்டல் கேட்ச்சாலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

பென் ஃபோக்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தாலும், மறுமுனையில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 134 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.இந்தநிலையில் இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம், இந்தியாவில் அஸ்வின் விளையாடிய 45 டெஸ்ட் போட்டிகளில் 23வது முறையாக ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை ஐந்து விக்கெட் அள்ளிய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.முதல் இடத்தில் முத்தையா முரளிதரனும் (45), இரண்டாவது இடத்தில் ஹெரத் (26) மற்றும் மூன்றாவது இடத்தில் அணில் கும்ப்ளேவும் (25) உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News