சுந்தர் மற்றும் தாகூரை பாராட்டி ஆஸ்திரேலியா பவுலர்களை கிளித்து தெரிந்த ரிக்கி பாண்டிங்க்!
சுந்தர் மற்றும் தாகூரை பாராட்டி ஆஸ்திரேலியா பவுலர்களை கிளித்து தெரிந்த ரிக்கி பாண்டிங்க்!

By : Pravin kumar
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியிலிருந்து பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர். இதில் லபுசாக்னே 108, பெய்ன் 50, கிரீன் 47 மற்றும் வேட் 45 ரன்கள் விளாசியுள்ளனர்.

இந்த போட்டியின் துவக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என அனைவரும் விரைவிலேயே விக்கெட்டை இழக்க இவ்வளவு பெரிய ரன்கள் இந்திய அணிக்கு வர காரணமாக இருந்தவர்கள் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தான் ஏனெனில் ரோகித் சர்மா, கில், புஜாரா, ரகானே, அகர்வால் என முன்னணி வீரர்கள் அனைவரும் 186 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் இந்திய அணி குறைவான ஸ்கோர் தான் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் கூட்டணி அமைத்த சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் இருவரும் ஜோடியாக 123 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வலுவான நம்பிக்கை அளித்தனர். இதனால் இந்த போட்டி முடிந்து இவர்கள் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய வீரர்கள் தாகூர் மற்றும் சுந்தர் ஆகியோரை குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய பாண்டிங் ” ஷர்துல் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்த இரு வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துக்கொண்டு நிதானமாக விளையாடி வருகின்றனர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் இவர்களது விக்கெட்களை வீழ்த்த திணறி வருகின்றனர்” என்று கூறியுள்ளார் ரிக்கி பாண்டிங்.
