இந்திய கிரிக்கெட் அணிக்கு நல்ல காலம் தான்: ஆனால் சவாலும் உள்ளதா?
இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது நல்ல காலம் இருந்தாலும் சவாலான காலம் இருக்கும் என்று கேப்டன் கூறி இருக்கிறார்.
By : Bharathi Latha
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் கேரளாவில் உள்ள மைதானத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சாதனை படைத்து இலங்கை அணிந்து இருக்கிறது. குறிப்பாக இந்த தொடரின் போது விராட் கோலி அதிகபட்சமாக 2 சதங்களை அடித்துள்ளார். முகமது சிராஜ் வந்து வீட்டில் கலக்கி இருக்கிறார்.
இந்த தொடரில் வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில் அவர், இந்தியாவிற்கு இனி நல்ல காலம் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இனிமேல் தான் இந்தியாவிற்கு சவால் இருக்கிறது என்றும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். இலங்கைக்கு எதிரான தொடர்கள் தற்போது எங்களுக்கு சாதகமாக சிறப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் தற்போது நடந்து இருக்கிறது. எங்கள் உடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை உறுதி செய்து இருக்கிறார்கள்.
தேவைப்படும் போதெல்லாம் அவர்கள் விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடிய இருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு நிச்சயம் சிறப்பாக தான் தோன்றும், ஆனால் இனிமேல் தான் தற்போது சவாலும் வந்து இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் நியூசிலாந்து தொடர் தொடங்குகிறது.
Input & Image courtesy: News