Kathir News
Begin typing your search above and press return to search.

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் ஓய்வு!

நியூசிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வந்த ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் ஓய்வு!

ThangaveluBy : Thangavelu

  |  30 Dec 2021 7:53 AM GMT

நியூசிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வந்த ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான நியூசிலாந்தின் டெஸ்ட் தொடருக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், வருகின்ற பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளிடையே நடைபெறும் தொடருக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். இவருக்கு தற்போது 37வயதாகிறது. 445 சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 18,074 ரன்களை எடுத்து 40 சதங்களை தொட்டுள்ளார். இவரது அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:CNN

Next Story
கதிர் தொகுப்பு
Trending News