கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஆள் உயர சிலை: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவின்படி தற்பொழுது மும்பை வான்கடே மைதானத்தில் ஆள் உயர சச்சின் சிலை வைப்பதற்கு அனுமதி கிடைத்து இருக்கிறது.
By : Bharathi Latha
கிரிக்கெட் ஜாம்பவான் என்று அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு ஆள் உயர சிலை மும்பையில் அமைக்கப்பட இருக்கிறது. இவர் இந்தியாவிற்காக 200 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 463 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் ஆக சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் முழு உயர சிலை அமைக்கப்பட இருக்கிறது. இது குறித்து கிரிக்கெட் சங்க தலைவர் அவர்கள் கூறுகையில், சிலை வைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கியிருக்கிறது.
மைதானத்தில் உள்ள மும்பையில் கிரிக்கெட் சங்க அறைக்கு எதிரே சிலை அமைக்கப்படும் பணிகள் முடிய ஐந்து மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது செல்லை திறந்து வைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரபலமான கிரிக்கெட் வீரருக்கு சிலை வைக்கப்பட உள்ளது இந்தியாவில் இதுவே முதல் முறை.
சிலை வைக்க சச்சின் டெண்டுல்கர் அனுமதி அளித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் எனப்படும் 90 கால கட்டங்களை சேர்ந்த சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். சிலை வைக்கும் முடிவு எனக்கு இன்ப அதிர்ச்சியாக அளிப்பதாக இருப்பதாகவும்,இது மிகப்பெரிய தருணம். என்னுடைய வாழ்க்கை இங்குதான் தொடங்கியது என்று உணர்ச்சிபூர்வமாக சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார். மேலும் மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: Behindwood News