Kathir News
Begin typing your search above and press return to search.

ஜடேஜாவிற்கு பதிலாக களம் இறங்கி ஆட்டநாயகன் விருதை தட்டிசென்ற சாஹலின் அசத்தல் பந்துவீச்சு.!

ஜடேஜாவிற்கு பதிலாக களம் இறங்கி ஆட்டநாயகன் விருதை தட்டிசென்ற சாஹலின் அசத்தல் பந்துவீச்சு.!

ஜடேஜாவிற்கு பதிலாக களம் இறங்கி ஆட்டநாயகன் விருதை தட்டிசென்ற சாஹலின் அசத்தல் பந்துவீச்சு.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  5 Dec 2020 10:11 PM IST

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான முதல் டி.20 போட்இன்நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கே.எல் ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிஆர்கி ஷாட் 34 ரன்களும், ஆரோன் பின்ச் 35 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், பின்வரிசையில் களமிறங்கிய ஹென்ரிக்ஸை (30) தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.

இந்நிலையில் போட்டி முடிந்து ஜடேஜாவுக்கு பதிலாக களம் இறங்கி விளையாடிய ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்ற சாஹல் இந்த ஆட்டம் குறித்து கூறுகையில் : நான் பல போட்டிகளில் மனதளவில் உறுதியாக இருந்து விளையாடி உள்ளேன். ஆனால் இந்த போட்டியில் நான் விளையாடப் போகிறேன் என்று முதல் பாதி முடிந்து பத்து பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் தெரியவந்தது.

நான் விளையாடப் போகிறேன் என்று தெரிந்ததும் நான் தயாராகிவிட்டேன். அதன்பிறகு ஆடம் ஜாம்பா இந்திய அணி வீரர்களுக்கு எதிராக எவ்வாறு பந்து வீசினாரோ அதே போன்று நானும் பந்துவீச முயற்சித்தேன். முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச்சு ஒத்துழைத்தது. இந்த மைதானத்தில் 150 முதல் 160 போதுமான டார்கெட் ஆக இருக்கும் என்று கருதினேன். என்னுடைய திட்டங்களுக்கு ஏற்ப நான் சரியாக பந்து வீசியதால் விக்கெட்டுகளும் கிடைத்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News