Kathir News
Begin typing your search above and press return to search.

கால்பந்து போட்டி வெற்றியை தேசிய விடுமுறையாக அறிவித்து நாடு முழுக்க கொண்டாடும் சவுதி அரேபியா

கால்பந்து போட்டி வெற்றியை தேசிய விடுமுறையாக அறிவித்து நாடு முழுக்க கொண்டாடும் சவுதி அரேபியா

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Nov 2022 3:11 AM GMT

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா - சவுதி அரேபியா அணிகள் மோதின.

தோகாவில் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை லயோனல் மெஸ்ஸி கோலாக மாற்ற அர்ஜென்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

அடுத்த ஆட்டத்தில் சவுதி வீரர்கள் இரண்டாவது பாதியில் 2 கோல்கள் அடித்து சவுதி அரேபியா முன்னிலை வகித்து அர்ஜெண்டினாவை வெற்றி கொண்டது.

உலகக் கோப்பையில் சிறந்த அணியாக கருதப்படும் அர்ஜெண்டினாவை சவுதி வெற்றி கொண்டது சவுதி மக்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று பொது விடுமுறையை சவுதி அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விடுமுறையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் சவுதி அரேபிய மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News