மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிறார் ஷிகர் தவான்: கேப்டன் ரோகித்தை முந்தினார்!
நியூசிலாந்து அணியுடன் முதலாவது ஒரு நாள் போட்டியில் கேப்டன் ஷிகர் தவான் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
By : Bharathi Latha
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகள் தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஈடன் பார்க்க மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டம் நியூஸிலாந்து அணி டாஸ்க் ஜெயித்து, பந்துவீச்சை தேர்வு செய்து களம் இறங்கியது. இந்திய அணிக்கு தவான் மற்றும் சுப்மர் கில் ஆகியோர் தரமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். இருவருமே மிகவும் நிதானமாக விளையாடிக்கொண்டு பவுண்டரிகளை அடித்து வந்ததால் எதிரணி பவுலர்களால் கணிக்கவே முடியவில்லை.
இதனால் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 124 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். சிறப்பாக விளையாடிய சுமன் 65 பந்துகளில் 50 ரன் அடித்து வெளியேறினார். மறுமுனையில் கேப்டன் தவான் 77 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார் இதனால் இந்தியாவிற்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. இல்லையேல் இந்த ஸ்கோர் மூலம் தவான் முக்கிய சாதனை படைத்திருக்கிறார்.
லிஸ்ட் B கிரிக்கெட் எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டியில் 796 போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்து 953 ரன்களை அளித்தவர் என்று பெருமையை பெற்றிருக்கிறார். ரோகித் சர்மா கூட இதுவரை 12 ஆயிரம் ரகளை கடக்கவில்லை என்று கூறப்படுகிறது எனவே இவர் தற்பொழுது முக்கிய இடத்தை பெற்றிருக்கிறார்.
Input & Image courtesy: News