அரை இறுதி போட்டியுடன் இந்தியா வெளியேறும்: பாகிஸ்தான் வீரரின் கருத்தால் சர்ச்சை!
இன்று பாகிஸ்தான் அடுத்த அரை இறுதிப் போட்டியுடன் இந்தியாவும் வெளியேறும் என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரின் கருத்து.
By : Bharathi Latha
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் ஜிம்பாவே அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. ஒரு ரன் வித்தியாசத்தில் இந்த அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு தவறிவிட்டது. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வெகு பந்துவீச்சாளர் அக்தர் கான் தன்னுடைய யூடியூப் சேனலில் கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தான் அணி இந்த வாரத்துடன் தாயகம் திரும்பி விடும்.
இன்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதேபோல இந்திய அணியும் அடுத்த வாரம் அரை இறுதிப் போட்டியுடன் விளையாடு தாயகம் திரும்பும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தியா ஒன்றும் தோற்க முடியாத அணி அல்ல. நாங்கள் இதைவிட மோசமாக இருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடு மற்றும் படி இல்லை சராசரியாகத்தான் இருக்கிறது. வீரர்கள் தேர்வும் சரியில்லை என்று அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இந்திய அணி அரையிறுதியுடன் T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறும் என்று அவர் கூறிய கருத்து இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் இந்தியா கோப்பையை வெல்லக்கூடாது என்று பொறாமையில் அவர் உளறிக் கொண்டிருப்பதாகவும் இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்து எடுத்து வருகிறார்கள்.
Input & Image courtesy: Thanthi News