ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து தோல்வி!
ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளார்.
By : Thangavelu
ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளார்.
பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள நிலையில், 2ம் சுற்று ஆட்டத்தில் தன்னை விட தரவரிசையில் பின்தங்கியுள்ள சீன வீராங்கனை ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.
இதனிடையே முதல் செட் ஆட்டத்தில் இரண்டு பேரும் 55 என்ற சமநிலையில் இருந்த சமயத்தில் பிரேக் செய்த ஜாங், அதன்பின்னர் தொடர்ந்து 6 புள்ளிகளை கடந்து முன்னிலை பெற்றார். ஆனால் சிந்துவால் அதனை முறியடிக்க முடியவில்லை. இறுதியாக அந்த செட்டை 14-21 என இழந்தார். ஆனால் அதற்கு அடுத்த செட்டை போராடி 21-15 என கைப்பற்றினார் சிந்து. ஆனால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் மூன்றாவது செட்டில் மீண்டும் சிந்துவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த ஜாங் அந்த செட்டை கைப்பற்றினார். இதனால் தோல்வியை சிந்து தழுவினார்.
Source: Maalaimalar
Image Courtesy: DNA India