Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த ஸ்மித்.!

இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த ஸ்மித்.!

இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த ஸ்மித்.!

Pravin kumarBy : Pravin kumar

  |  28 Nov 2020 11:22 AM GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர்,

இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் ஸ்மித் 51 பந்தில் சதம் வீளாசி அசத்தியதன் மூலம் குறைந்த பந்தில் சதம் வீளாசியவர் பட்டியலில் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் அனைத்து பேட்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News