இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா அணி!

By : Pravin kumar
இலங்கை அணி தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் பின்னர் வந்த தனஜேயா மற்றும் சண்டிமல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை மீட்டனர்.
இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 340/6 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கதிலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க இலங்கை அணி 396 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களை இழந்தது.

இதை தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்ரிக்காவில் அணியில் தொடக்கவீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணிக்கு பலப்படுத்தினர். எல்கர் 95 ரன்களிலும் மார்க்ரம் 68 ரன்களும் அடித்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.
இதை தொடர்ந்து களம் இறங்கிய வான் துஷன் 15 ரன்னில் விக்கெடை இழந்தார். பின்னர் களம் இறங்கிய பாப் டுப் ப்ளஸிஸ் நிலைத்து விளையாட கேப்டன் குயிடன் டி காக் 18 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் டுப் ப்ளஸிஸ் உடன் ஜோடி சேர்ந்த பவுமா நிலைத்து விளையாட இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 317-4 ரன்கள் சேர்த்தது.
