இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழலில் 126 ஆல் அவுட் ஆனது இலங்கை அணி!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழலில் 126 ஆல் அவுட் ஆனது இலங்கை அணி!
By : Pravin kumar
இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி அதே கலே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா 6 ரன்னில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய ஓசா பெர்னான்டோ டக்அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய மேத்திவுஸ் திரிமானே உடண் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த திரிமானே 43 ரன்னில் வெளியேற நிலைத்து விளையாடிய மேத்திவுஸ் சதம் வீளாசினார்.
அடுத்து வந்த சண்டிமல் அரைசதம் விளாச டிக்குவெள்ள சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இலங்கை அணி 300 ரன்கள் மேல் கொண்டு சென்றார். சண்டிமல் 52 ரன்னிலும் டிக்குவெள்ள 92 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் திஸ்வான் பெரேரா கடைசி வரை போராடி அரைசதம் விளாச இலங்கை அணி 381 ரன்கள் சேர்த்தது. இதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அப்படியே இரண்டாவது டெஸ்ட் போட்டியை தொடர 186 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிஸில் 37 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியவில்லை. 126 ரன்களூக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இலங்கை அணி. அதன் பின்னர் இங்கிலாந்து அணி வெற்றி நோக்கி சென்றுள்ளது.