Kathir News
Begin typing your search above and press return to search.

தூக்க மாத்திரை போட்டேன் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுக்மன் கில்.!

தூக்க மாத்திரை போட்டேன் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுக்மன் கில்.!

தூக்க மாத்திரை போட்டேன் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுக்மன் கில்.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  31 Jan 2021 5:38 PM GMT

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் டி20 என மூன்று வருட போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த இந்தியா திரும்பியது. இதற்காக கிட்டத்தட்ட 30 வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டனர். ஒருவர் பின் ஒருவராக காயமடைந்து இந்தியாவிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில்தான் பல இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.சுப்மன் கில், தங்கராசு நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஷ்ரதுல் தாகூர் போன்ற எதிர்பாராத வீரர்கள் எல்லாம் அணியில் களமிறங்கி தங்களை நிரூபித்தனர்.

வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது தந்தையை இழந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்காக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரராக இருந்த மயங்க் அகர்வால் சரியாக விளையாடாததால் அவருக்குப் பதில் இளம் வீரராக இருந்த சுப்மன் கில் களமிறக்கப்பட்டார்.

முதல் போட்டியில் விளையாடி 45 மற்றும் 35 என ஓரளவிற்கு ரன் சேர்த்தார். அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஆடி 255 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்தார் சுப்மன் கில். இந்நிலையில் தனது முதல் போட்டி குறித்து பேசியிருக்கிறார் கில்.

இதுகுறித்து அவர் கூறுகையில் :

அதிலும் முதல் போட்டி விளையாடுவதற்கு முன்பாக தனக்கு தூக்கமே வரவில்லை என்றும், அதற்காக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டுதான் தூங்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில்…. அடிலெய்ட் மைதானத்தில் முதல் போட்டியின்போது 36 ரன்னில் ஆல் அவுட் ஆகி விட்டோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீரென்று இப்படி நடந்துவிட்டது. அப்படித்தான் நடக்கிறது என்று உணர்ந்து கொள்ளவே எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது.

வெற்றி பெறுவோம் என்று நினைத்திருந்த நேரத்தில் ஒரு மணி நேரத்தில் போட்டியே மாறிவிட்டது. இதன் காரணமாக அடுத்த போட்டியில் நான் களமிறங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனக்கு தூக்கமே வரவில்லை. இதன் காரணமாக நான் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு தான் தூங்கினேன் என்று தெரிவித்திருக்கிறார் 21 வயதான சுப்மன் கில்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News