Kathir News
Begin typing your search above and press return to search.

சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி எச்சரிக்கும் தெலுங்கானா எம்.எல்.ஏ விவரம் உள்ளே.!

சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி எச்சரிக்கும் தெலுங்கானா எம்.எல்.ஏ விவரம் உள்ளே.!

சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி எச்சரிக்கும் தெலுங்கானா எம்.எல்.ஏ விவரம் உள்ளே.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  25 Feb 2021 7:46 PM IST

இந்த வருடதிற்கான ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான மினி ஏலம் ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. ஏலத்தில் பங்கெடுத்த அணிகள் தங்களது அணிக்கு ஏற்ப வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.அப்படி சன் ரைஸரஸ் ஹைதராபாத் மூன்று வீர்களை ஏலத்தில் எடுத்தது.புனேவைச் கேதர் ஜாதவை 2 கோடிக்கும், மைசூரை சேர்ந்த ஜகதீசன் சுச்சித்தை 30 லட்சத்திற்கும், அப்கானிஸ்தானை சேர்ந்த முஜிப் உர் ரஹ்மானை 1.5 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது.

இந்தநிலையில் எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளூர் வீரர்களுக்கு சரியாக வாய்பளிக்கவில்லை. ஹைதராபாத்தை தனது பேரில் கொண்டிருக்கும் அணி ஏலத்தில் ஒரு உள்ளூர் வீரருக்கு கூட வாய்பு தரவில்லை என்று தனது அதிருப்தியை பத்திரிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

தெலுங்கானாவைசேர்ந்த எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் இதுபற்றி கூறியவை , “உள்ளூர் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்குங்கள் இல்லையெனில் அணியின் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்று தனது கண்டனத்தை கூறியுள்ளார். மேலும் ஹைதராபாத் அணியினர் வெளியூர் விரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது போல உள்ளூர் இளம் வீரர்களுக்கு இனி வரும் காலங்களில் வாய்ப்பு வழங்கியே ஆக வேண்டும்.இதே போக்கு நீடித்தால் ஹைதராபாத் அணி தனது பெயரை மாற்றி கொள்ள வேண்டும் மற்றும் கிரக்கெட் போட்டியை இங்கு நாங்கள் ஆதரிக்கவும் மாட்டோம் என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News