Kathir News
Begin typing your search above and press return to search.

டி20 போட்டி: இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.

டி20 போட்டி: இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!

ThangaveluBy : Thangavelu

  |  11 Feb 2022 4:08 PM GMT

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான மெக்டர்மோட் அரை சதத்தை தொட்டு வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இறுதியாக அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. அந்த அணியில் தொடக்க வீரரான பதுன் நிஷாங்கா 36 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து ஒரு பேட்ஸ்மேன் கூட சிறப்பாக விளையாவில்லை. தினேஷ் சண்டிமால் 25 ரன்களில் போராட்டத்தை தொடர்ந்தார். 19வது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தபோது மழை காரணமாக ஆட்டம் நின்றது. இதனை தொடர்ந்து டி.எல். விதிப்படி ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News